"ஸ்ரீரங்கத்து தேவதைகள்" டிடி1-ல் வந்தது பெரும்பாலான அன்பர்களுக்கு தெரியாதிருக்கலாம். காரணம் அனேகம் பேர் தூர்தர்ஷன் இணைப்பே இல்லாமல் வாழ்ந்திருக்கிறார்கள். சதா சன்விஜயராஜஜெயபாரதி உலகில் வாழ்கிறார்கள். கேபிள் டிவிக்காரர்கள் சாஸ்திரத்துக்கு தூர்தர்ஷன் இணைத்தாலும் அது நான்காகத் தெரிகிறது. அதனால் தூர்தர்ஷனைத் தௌ¤வாகப் பார்ப்பதற்கு 75 ரூபாய் கொடுத்து ஒரு சேஞ்ச்- ஓவர் ஸ்விட்சு வைக்க வேண்டியிருக்கிறது. தூர்தர்ஷன் மெல்ல மெல்ல நகர்ப்புறம் தவிர்த்த தடமாகிக் கொண்டிருப்பதை ப்ரசார் பாரதி கவனிக்க வேண்டும்.
"ஸ்ரீரங்கத்து தேவதைகள்" என் சிறுகதைகளின் தொகுப்பு. அவைகளின் இரண்டு பொது அம்சங்கள் ஸ்ரீரங்கமும் அதை நினைவுகூரும் இளவயது நானும்தான். சிறுகதைகளைத் தொடராக தரும்போது உள்ள சங்கடம் விளம்பரதாரர்கள் கேட்கும் ரிப்பீட் ஆடியன்ஸ் இல்லாதது. ஓர் எழுத்தாளனுக்கு தன் கதைகள் திரைப்பட அல்லது தொலைக்காட்சி வடிவில் வரும்போது முழுத் திருப்தி இருப்பதில்லைதான். ரேவதி என் அடுத்த 'டி.என்.ஏ.' கதையைப் பார்த்தபோது இந்த மாதிரி கெடுத்திருக்கிறார்களே என்று கண்ணீர்விட்டு கடிதம் எழுதியிருந்தார்கள்.
ஆனால் விதிவிலக்காக டைரக்டர் மோகன் என்னுடைய "திண்ணா" சிறுகதையை எடுத்திருந்த விதம் என்னை பிரமிக்க வைத்தது. முக்கிய காரணம் பொருத்தமான பாத்திரத் தேர்வு. டெலிவிஷனுக்கு தனி அடையாளம் தேவைப்படுகிறது. தற்போது மொத்தத்தில் 90 விழுக்காடு சினிமா சார்ந்த நிகழ்ச்சிகளாக இருப்பதால் (உங்களுக்கு மிகவும் பிடித்த காட்சி என்ன, சிம்ரன்? உங்களுக்கு எப்ப கல்யாணம், ரம்பா? யாரையாவது லவ் பண்றீங்களா, சினேகா?) இன்னும் இரண்டு வருடத்தில் அலுத்துப் போய்விடும். அதன்பின் அது தனக்கென்று தனி அடையாளத்¢தைத் தேடும். அமெரிக்கா போல பாரபட்சமற்ற "ரேட்டிங்"குகள் வரும். சீரியல்கள் சுவாரசியமில்லையென்றால் பாதியில் மென்னியை முறிப்பார்கள். செய்திகள், விமர்சனங்கள், தொலைக்காட்சிக்கென்றே எடுக்கப்பட்ட சுவாரசியமான டாக்குமெண்ட்ரிகள், அறிவியல் எல்லாம் வந்து அதில் வரும் அறிவிப்பாளர்களும் நடிகர்களும் சினிமாவைவிட பிரபலமாகி சினிமா என்பது மொத்தத்தில் பத்து சதவிகிதத்துக்கு குறைந்துவிடும்.
DTH என்னும் வீட்டு நேரடி ஒளிபரப்பு சாட்டிலைட்டுகள் கேயு பாண்ட (Ku Band) என்னும் உயர் துடிப்பலையில் வந்ததும் தற்போதைய கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் வழக்கொழிந்து வேறு விதமான கேபிள் டிவி வரும்.
நேரடியாக நம் வீட்டு சன்னலிலே சின்னதான கிண்ணி வைத்துக் கொண்டு அதில் குறைந்தபட்சம் 60 சானல் பார்க்கலாம். (இப்போதே மலேசியாவின் "வானவில்" இந்த வகை.)
என்னதான் ப்ரசார் பாரதி எதிர்த்தாலும் காலத்தின் கட்டாயமாக எஃப்.எம். போல தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்புகள் வரத்தான் போகின்றன. அப்போது அத்தனை சானல்களுக்கு 24 மணி நேரம் தீனி போட இதுவரை எடுத்த சினிமாக்கள் அனைத்தையுமே காட்டினாலும் போதாது. இப்போதே அந்த நிலை வந்துகொண்டிருக்கிறது. அதனால் கட்டாயமாக தொலைக்காட்சி தனக்கென்று தனி அடையாளம் தேடித்தான் ஆக வேண்டும்.
நான் என் சினிமா டைரக்டர் நண்பர்களிடமெல்லாம் டெலிவிஷனை புறக்கணிக்காதீர் எதிர்காலத்தில் இதுதான் முதன்மை பெறப் போகிறது என்று சொல்லி வருகிறேன். இது அடுத்த ஐந்து வருஷத்தில். இன்னும் கொஞ்சம் தள்ளிப்போனால் இன்டர்நெட், சாட்டிலைட் இணைப்புகள் எல்லாம் கலந்து கட்டி டெலிபோன், டெலிவிஷன், சினிமா, கம்ப்யூட்டர், செய்தி எல்லாமே வீட்டில் ஒரே ஒரு ப்ளக் பாயிண்ட்டில் வந்துவிடும். அந்த அளவுக்கு அலை அகலம் ( Bandwidth) வரப் போகிறது. வீட்டைவிட்டு வெளியே போனால் ஒரே ஒரு செல்போன் எடுத்துக் கொண்டு போகலாம். அது உலகம் முழுவதற்கும் பொதுவாக இருக்கும். சிம்கார்டையெல்லாம் மாற்ற வேண்டியதில்லை. தாழ்வாகப் பறக்கும் சாட்டிலைட்டுகள்தான் எதிர்காலத் தொலைபேசி நிலையங்கள். 2010-க்குள் இன்றைய வடிவ டெலிபோன், டெலிவிஷன், சினிமா மூன்றுமே இறந்து போகும்.
By Writer Sujatha
thanks: Ambalam
நான் பொதிகை தான் அதிகம் பார்ப்பேன். ஸ்ரீரங்கத்து தேவதைகள் ஒளிபரப்பும் நேரம் என்ன தெரியாதே? ள:((((
ReplyDeleteமாமி எந்த காலத்தில் இருக்கேள் இது அவரு பல வருடங்களுக்கு முந்தி எழுதியது
ReplyDeleteவிஞ்ஞானத்துறையில இருந்ததாலே, அவர் எழுதுன நெறய விஷயங்கள் நடந்துருக்கு, உதாரணத்துக்கு செல்போன். ஆனா இதயும் தாண்டி, சுஜாதாகிட்ட எனக்கு பிடிச்சது அவரோட எழுத்து நடை.
ReplyDeleteவீர சுந்தர் said...
ReplyDeleteவிஞ்ஞானத்துறையில இருந்ததாலே, அவர் எழுதுன நெறய விஷயங்கள் நடந்துருக்கு, உதாரணத்துக்கு செல்போன். ஆனா இதயும் தாண்டி, சுஜாதாகிட்ட எனக்கு பிடிச்சது அவரோட எழுத்து நடை.
//
thanks veera , neenga solradhu 100 percent unmai
அம்பியண்ணா..இப்பத்தேன் நம்ம வழிக்கு வந்திருகீய்க....
ReplyDeleteஆனா அதுக்காக தேவதைகள பாக்க ஸ்ரீரங்கமெல்லாம் போக முடியாது.ஏதோ பக்கத்துல இருக்கறமாதிரி தோகா..இல்ல பாண்டிச்சேரி தேவதைகளுன்னு போட்டாக்க யுஸ்புல்லா இருக்குமில்ல?..ஹிஹி...
[அந்த நாடகம் நா பாக்காததால இப்பிடி ஹிஹி..அப்பறம் சுஜதா கணிச்ச விஷயம் இப்பவே நடக்க ஆரம்பிடுச்சி..]
இன்னும் மறக்கமுடியல... இது DD ல வந்தப்ப, எங்க வீட்டில் வேற சேனல் எதுவும் கிடையாது. குடும்பத்துடன் ரசிச்சுப் பார்ப்போம்.. அப்போதெல்லாம் சுஜாதானா யாருன்னு கூட தெரியாது.. இன்னைக்கும் அந்த காட்சிகள் பசுமையா நெஞ்சில் நிக்குது.. :-)
ReplyDelete