Monday, January 24, 2011

அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது

சமீபத்தில் படித்த புத்தகம்ஸ் :

அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது-எஸ்.ரா

வாசக பர்வம் -எஸ்.ரா

வாசகர் பர்வம் இது போன்ற அனுபவ கட்டுரைகள் தான் எஸ்ராவின் பலமென தோன்ற்கிறது..இந்த புத்தகத்தில் அவர் வாழ்வில் சந்தித்த தமிழ் எழுத்தாளர்களையும் பற்றியும் அவர்களிடம் பழகிய நாட்கள், அவர்களை தூர இருந்து ரசித்தது பற்றி, அவர்களிமிருக்கும் குழ்ந்தை தனம் பற்றி என நீளுகிறது ..தினமும் ஒரு கட்டுரை என இன்று தான் படித்து முடித்தேன்

இதில் சில கட்டுரைகளை இணையத்தில் அவரது பக்கத்தில் படித்தமையால் கொஞ்சம் ஏமாற்றமேற்படுகிறது , உயிர்ம்மை பதிப்பகம் ஒவ்வொரு புத்த்கத்துகும் நிர்ணயிக்கும் விலையும் பீதி கிளப்புகிறது

அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது பற்றி தனியாக எழுதுகிறேன் அவ்வளவு இருக்கிறது எழுத

சமீபத்திய பயணம்



சொந்த ஊருக்கு போனது தான்..பொங்கல் சாக்கில் பழைய நண்பர்களை பார்க்க முடிந்தது..எல்லாரிடமும் செல்போனிருக்கிறது ..சில பேரிடம் நம்பர் பரிமாறிக்கொள்ள கூட தோண வில்லை.

நண்பர்களை நீண்ட நாள் கழித்து பார்க்கும் போது போய் டீ அடித்துக்கொண்டே பேசும் பழக்கம் மாறி வா மச்சி ஒயின்ஷாப் போய் ஒரு பீர் போடலாமென விட்டது..

டிவி பார்க்கும் ஆர்வம் குறைந்து, இலக்கில்லாமல் சுற்றும் ஆர்வம் அதிகமாகியிருக்கிறது எனக்கு

வேலியில் தலையாட்டிக்கொண்டிருந்த ஓணான்களை ஒன்று செய்யும் செய்யாமல் கடந்தது எனக்கே ஆச்சர்யமளித்தது

போகும் போது ரயில்களில் ஐடி இளைஞர்களும் யுவதிகளும் காதுகளில் ஒயர் மாட்டிக்கொண்டும் இரவு முழுக்க போர்வை போற்றி பேசிகொண்டிருந்ததும் பார்த்த போது ‘நம்ம ஊரையாது விட்டு வைங்கடா வென கத்த தோன்றியது‘

கொஞ்ச நேரம் கிரிக்கெட் விளையாடி விட்டு , உடன் விளையாடி பசங்களுக்கு பொங்கல்படி கொடுத்துவிட்டு ரயிலேறிவிட்டேன்

சமீபத்தில் பாதித்த சம்பவம்

ஐயப்பன் கோவிலில் கூட்ட நெரிசல் அதிலும் தமிழர்கள் பலர் இறந்தனர்



இந்த முறை டிவியில் மகரஜோதி பாதி பார்த்துக்கொண்டிருந்த அப்பா ‘கருடன் வரவேயில்லை சகுனம் சரியில்லை‘ என உச் கொட்டிகொண்டிருந்ததும், பேருந்தில் Sடேசன் செல்லும் போது ரெண்டு பெருசுக ‘இஅவனுக காசு வாங்கிட்டு எல்லாவனையும் உள்ளெ விட்டுபுடுறானுக, பொண்ணுக எல்லாம் பக்கத்திலயே நின்னு சாமிய வெறிக்குதுக, மலைக்கு போற பய ஒருத்தன் கூட ஒழுங்கா விரதமிருக்கிறதில்ல,பொறவு இப்படிதானே நடக்கும்‘என பேசிக்கொண்டிருநததும் யோசிக்க வைத்தது.

சமீபத்தில் பார்த்த ரசித்த பெண்:

Office Cafeteria வில் 1.22.13 க்கு தினமும் வரும் அந்த மலையாள பெண்..அப்படி ஒரு அழகு..என்ன ஒரு சின்ன பிரச்சினை கூட வரும் அந்த ஹிப்பி வச்ச மங்கி பையன் தான்..அடிக்கடி தொட்டு பேசுறான்..அவனை மட்டும் அவட் ஆப் போகஸ் ல தள்ளுனா சூடான செம்மீன் கறி ரெடி




சமீபத்தில் விழுந்து விழுந்து சிரித்தது:

புருஷன்: ஏண்டி இவன் தான் உன் கள்ளக்காதலனா..பிச்சைக்காரன் மாதிரி இருக்கான்

மனைவி: குடிச்சிட்டு கண்ணாடி முன்னாடி நின்னு உளறாம மூடிக்கிட்டு போய் படுங்க (உங்களுக்கு சிரிப்பு வரலையா???? அப்போ ஒண்ணியும் பண்ண முடியாது)

சமீபத்தில் எழுதிய பதிவு:இது தான்

Wednesday, January 19, 2011

எனக்கு பிடித்த இளையராசாவின் பாடல்கள்

இளையராஜா என்பதை விட இளையராசா எனக் குறிப்பிடும் போது இன்னும் நல்லா இருக்கு:)

ஓகே இளையராசாவின் இசைத் திறமையையோ அவரின் புகழ்பாடவோ இந்த பதிவு இல்லை என்பதை முதலிலே சொல்லி விடுகிறேன் எல்லாம் பாதுகாப்பு காரணம் தான் ஹி ஹி

அவருடைய பிரபல பாடல்கள் எல்லமே சின்னக் குழந்தைக்கு கூட மனைப்பாடமாக இருக்கும் ஆனால் அவருடைய பிரபலமாக அதிகமாக பேசப்படத பல சிறந்த பாடல்களை பற்றி தான் இங்கே அலச போறோம்

ஒரு வேளை இந்த பாடல்களில் பல உங்களில் பலருக்கு தெரிந்திருக்கலாம்,பிடித்திருக்கலாம் மாற்றுக்கருத்தும் கூட இருக்கலாம் எல்லாவற்றையும் இங்கே பதிவு செய்யுங்கள்

மோகன் பாடல்கள் ,அவருடைய ஜனனி பாடல்களை விட்டு விட்டு அவர் இசையமைத்து ஓடாத சில படங்களில் பற்றி முதலில்



'என்னுள்ளே என்னுள்ளே' என்ற பாடல் வள்ளி படத்திலிருந்து..இந்த படத்தை கடையம்(எங்க ஊரு)கோபாலகிருஷ்ணா தியேட்டரில் பார்த்தது இன்னும் நினைவிலிருக்கிறது
ரஜினி தயாரிப்பில் வந்த இந்தப்படம் பெரும்தோல்வியை தழுவியது..இந்த பாடல் தான் படத்தின் முக்கிய கட்டம்..நகரத்திலிருந்து வந்த ஒரு இளைஞர் கூட்டம் ஹீரோயின் ஊரில் டெண்ட் அடித்து ஆட்டம் போடுகிறது அதில ஒரு இளைஞன் பரதநாட்டிக்காரனாயிருக்கிறான்

அவன் மேல் ப்ரியம் கொண்ட ப்ரியா அவனுடன் ஆடியபடியே தன் கற்பை இழக்கும் தருணத்தில் வரும் பாடலிது.இந்த பாடலை பலமுறை கேட்டுப்பாருங்கள் அடிமையாகிவிடுவீர்கள்..இந்தப்பாடலை பார்க்க நீங்க மிட்நைட் வரை முழிக்கனும் ஆமா மசாலமிக்ஸ் அல்லது ஆலிங்கனம்(கேப்டன் டிவி :))யில் இரவு 12 க்கு மேல் பார்க்கலாம்..இதெல்லாம் உனக்கெப்படி தெரியும்னு நீங்க கேட்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன்



அடுத்தது 'என்னுள்ளே ஏனோ' ரோசாப்பூரவிக்கைகாரி படத்திலிருந்து இதுவும் கில்மா பாடலாகியதில் பெரும்வருத்தம் எனக்கு இல்லையென்றால் பகலிலே பார்க்கலாம்..இந்த பாடலில் இடையிடையே ரவிச்சந்திரன்(Actress Lakshmi sமுன்னாள் கணவருள் ஒருவர் என ஐயம்!!)வரும் வசனங்கள் தான் இந்த பாடலை இன்னமும் அழகாக்கியிருக்கிறது என்பது என் திண்ணம்.



'அந்த இடம் ரொம்ப அழகாயிருக்கும் உங்களுக்கு ஆட்சேபனையில்லைனா' என வில்லன் டயலாக் பேசி ஹீரோயினை கபளீகரம் பண்ணும் பாடல்..இன்னமும் ராசா அவருடைய கான்சர்டோவில் விரும்பி இசைக்கும் பாடலிது

கேட்டு பாருங்கள்!!!



நெக்ஸ்ட் அலைகள் ஓய்வதில்லை படத்தில் வரும் 'விழியில் விழுந்து'..வைரமுத்துவின் முதல் பாடல்.இந்த பாடலுக்கு என்ன சிறப்பென்றால் அப்போதே ரெண்டு வெர்ஷன் கான்செப்ட்டை ராசா அறிமுகப்படுத்தியிருப்பார்..ஒரு பாடல் கவிதை வாசிப்பது போலவும் இன்னொரு பாடல் வேகமாயும் வரும்.



இது நல்ல பிரபலமான பாடலென்றாலும் ரெண்டு வெர்ஷனையும் கேளுங்கள்

அடுத்தது 'கோடைகாலக்காற்றே' ப்ரம் 'பன்னீர் புஷ்பங்கள்' படம்..இந்தப் படத்தின் எல்லா பாடல்களும் மெகா ஹிட் ஆனா இந்த பாட்டு தான் என்னோட பேவரைட்..பள்ளிமாணவர்கள் ஊட்டியில் சிக்ஸ்த் மைலில் டூரில் இருக்கும் போது பிரதாப் பள்ளி வாத்தியார் பாடும் பாடலிது..தூக்கம் வரலைன்னு பியர் அடிப்பவர்களா நீங்க இந்தப்பாடலை கேளுங்க 75 ரூபாய் மிச்சம்



இந்தப்படத்தின் ஸ்பெசாலிட்டி இதன் டைரக்கடரு நம்ம பி.வாசு நம்பமுடியலை தானே அவசரப்படாதீங்க அவருடன் சேர்ந்து நம்ம சந்தானபாரதியும் இயக்கியிருக்கிறார் இப்ப புரியுதா படம் ஏன் ஓடிச்சுன்னு

இன்னொரு விஷயம் இந்தபட ஹீரோயின் தான் நேருக்குநேர் படத்தில் சூர்யா அக்காவாய் வரும்!!

மீண்டும் சந்திப்போம் இன்னும் சில கிளாசிக் பாடல்களுடன்

Tuesday, January 11, 2011

புத்தக சந்தை இந்த வருடமும்…

இந்த வருடமும் ஏகப்பட்ட ரிமைண்டர் வைத்து ஒரு வழியாக இரண்டு பள்ளி நண்பர்களுடன் போயே விட்டேன்..ஒரு மாற்றத்திற்காக பீச்சுக்கு போவதை விடுத்து நிறைய காதலர்கள் , பெற்றோர்கள் அவர்களின் குழந்தைகளை அழைத்து வந்திருந்தார்கள்..வழக்கம் போல் மூத்திர பிறை கொடுமையாய் இருந்தது


கிழக்கு பதிப்பகம் மற்றும் உயிர்மையில் கூட்டம் அதிகம்..சுயமுன்னேற்ற சிக்ஸ்த் சென்ஸ் மற்றும் மணிமேகலை மாதிரியான பதிப்பகங்களில் வேறுவிதமான கூட்டமதிகம்.


சாகித அகாடமி புத்த்கம் அதிக சேல்ஸ்..கோபிநாத் அடுத்த புத்தகம் எழுத ஆரம்பித்து விட்டாரம்..சிவகுமார்..சூர்யா..அடுத்து கார்த்தி கூட எழுதலாம்


விகடனில் ஆன்மீக கூட்டம் அதிகம்..எஸ்.ராவின் 3 புத்தகம்ஸ் ஒரு சாரு அப்புறம் வாத்தியார் என் சிக்கனமாய் முடித்துக்கொண்டு கிளம்பினேன்


சில பிளாகர்களையும் பார்க்க முடிந்தது..மனுஷ்ய புத்திரன் அந்த கூட்டத்திலும் தனிமையாயிருந்தார்..கிழக்கில் சுஜாதா புத்த்கங்களை மக்கள் அள்ளிக்கொண்டிருந்தனர்..


‘சுஜாதாவும் ஸீரோ டிகிரி எழுதினார் தானே?’


‘சாரு பகிரங்கரமாய் எழுதுவார்‘


‘காபி இல்லையா டீ நல்லாவே இல்லை‘


‘இதுக்கு பீச்சுக்கு போயிருக்கலாம்‘


‘சார் வீட்டுக்கு திரும்பி போக மட்டும் தான் காசு வச்சிருக்கேன் எல்லாத்துக்கும் புத்தகம் வாங்கிட்டேன்‘


‘குழந்தை சுகன்யாவின் அம்மா எங்கே சமையல் குறிப்பு வாங்கிக் கொண்டிருந்தாலும் அலவலகத்திற்கு வரவும்‘


இந்த மாதிரி சம்பாஷனைகளை தாண்டி ஒரு குல்பி ஐஸோடு சுபம் போட்டு வீட்டுக்கு கிளம்பிட்டேன்

Friday, January 07, 2011

இந்த படமெல்லாம் தமிழில் வருவதற்கு முன்னர் தயய் செய்து பார்த்துவிடுங்கள்

சமீபத்தில் பார்த்த படங்கள்:



நண்பர் கம் பிளாகர் கொடுத்த ‘The Band’s visit’ பார்த்தேன்..வாவ் ..வார்த்தையில் விவரிக்க முடியாத உணர்வு அது..என்ன அருமையான நடிகர்கள்,இயல்பான நடிப்பு..எளிமையான கதை..அட்டகாசமான ஒளிப்பதிவு .மிகமுக்கியமாக பின்னனி இசை

எகிப்தை சேர்ந்த ஒரு பேன்ட்(இசைக்குழு) இஸ்ரேலுக்கு வருகிறது அவர்களுக்கு அங்கு இசை நிகழ்ச்சி நடத்த அழைப்பு விடுக்கப் பட்டிருந்தது..

ஆனால் போக வேண்டிய இடத்திற்கு பதிலாக இவர்கள் வேறு ஒரு இடத்தில் இறங்குகிறார்கள்
அங்கு ஒரு உணவகத்தில் உரிமையாள பெண்ணிடம் உதவி கேட்கின்றனர் அன்று இரவு அவர்களை அங்கு அவள் தங்க அனுமதிக்கிறாள்..

அந்த இரவில் என்ன நடக்கிறது இது தான் கதை..ஒரு இரவு இவ்வளவு நீண்டதா என் யோசிக்க வைத்த படம்..

யோசித்து பார்த்தால் இரவு நீளமானது தான்..2006 ல் நான் ஒரு பிளாகில் படித்த அந்த அருமையான கவிதை இப்போது நினைவிற்கு வருகிறது

“அந்த இரவில் அவசர உதவிக்கு
ஆம்புலன்ஸ்க்கு தொலைபேசுபவன் மேல்
உலகின் கை எழுதுகிறது
உலகின் மிக நீண்ட இரவிற்கு தயாராகுங்கள்”

வார்த்தைகள் சரியாக இல்லை ஆனால் அர்த்தம் இது தான்.

இந்த படத்தில் குறிப்பிடத்தக்க விஷயங்கள்

அந்த பேன்ட் தலைவரின் அருமையான நடிப்பு ..அந்த மிடுக்கு இளைஞனின் நடிப்பு..அந்த உதவி தலைவரின் நடிப்பு..

இந்த படமெல்லாம் தமிழில் வருவதற்கு முன்னர் தயய் செய்து பார்த்துவிடுங்கள்

சமீபத்தில் பார்த்த படம் தமிழில்



அதிக எதிர்பார்ப்பில்லாமல் போனதால்

என்னவோ அதிக ஏமாற்றமில்லை..கமல் வழக்கம் போல மாதவனை டம்மியாக்கியிருக்கிறார்
த்ரிஷா குட்டிக்கு நடிக்க கொஞ்சம் வாய்ப்பு..சங்கீதாக்கு இந்நேரம் 5 படங்கள் கையிலிருக்கலாம் மாதவனை படம் முழுக குடிகாரனாய் காட்டி டார்ச்சர் பண்ணி விட்டார்கள்..குரூப் காமெடி சகிக்க முடிய வில்லை ..கமல் கொஞ்சம் ரஜினி போல செய்கிறார்..உலக நாயகன் என பெயர் போடும் போது ..மொபைலை மேலே போட்டு காட்ச் பிடிப்பது… பையனின் தொண்டையிலிருந்து காயின் எடுப்பது என!
மிகப்பிடித்த விஷயம் இந்த படத்தில் அந்த ரிவர்சில் போகும் பாடல்.

சமீபத்தில் ரசித்த பாடல்கள்:

ஈசன் படத்தில் வரும் ‘மெய்யான இன்பம்’ பாடல்..அருமையான பார்டி பாடல் ..இப்பொதெல்லாம் அடிக்கடி கேட்கிறேன்..சுக்விந்தரை விட அந்த இன்னொரு பாடகரின் குரல் தான் அதிகம் கவர்கிறது..கேட்டுப்பாருங்கள்

மற்றொரு பாடல் தோல்வி அடைந்த 1/ கட்டிங் படத்தில் வரும் ‘தேடியே தேடியே’..எளிமையான வரிகள் அருமையான கட்சியமைப்பு..

சமீபத்திய பயணம்:


என் சொந்த ஊருக்கு 6 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கடந்த மாதம் சென்றேன் ..இங்கிருந்து மங்களூர் மங்களூர் மெயிலில் கோவை வழியாக பயணம்

சின்ன வயது நியாபகங்கள் அலைமோதியது.சொர்ணூரில் புரோட்டாவும் வாங்கியது எப்போது டா பேக்கல் கோட்டை(உயிரே படத்தில் வரும் அந்தக்கோட்டை, அப்புறம் மனிஷா பாட்டி ஓடி வரும் அந்த இடங்கள் எல்லாத்தையும் மனைவிக்கு சின்னக்குழந்தையின் குதுக்கலத்தோடு காமித்துகொண்டே வந்தேன் காசர்கூடில் வரும் அத 2 நிமிட குகை..மங்களூருக்கு முன்னாடி வரும் நேத்ராவதி ஆறு என எல்லாவற்றையும் மீண்டும் பார்த்ததில் மனது நிறைந்தது

Saturday, December 25, 2010

நமீதா குட்டி-த்ரிஷா-ஸ்ரேயா பாப்பா

இப்போதெல்லாம் குழந்தைகளின் பெயர்கள் அல்லது பெரிய பாப்பாக்களை சின்ன பாப்பாவாய் நினைத்துக் கொண்டு நிறைய பேரு கவுஜ எழுத ஆரம்பித்து விட்டார்கள்..இது என்ன புது டிரண்டோ..கடந்த வார விகடனில் கூட இப்படி ஒரு கவிதை பார்த்ததாய் நியாபகம்
அப்படி நானும் முயன்றதில் சில உங்கள் பார்வைக்கு

முகத்தை மட்டும் பார்த்து பேசமுடியாதா உன்னால
முறைக்கிறாள் நமீதா குட்டி
நான் உன் அகத்தையும் சேர்த்து பார்த்துக்கொண்டிருக்கிறேன்
என இளிக்கிறேன் நான்


போதை ன்ன என்னடா மலங்க மலங்க கேட்டாள் த்ரிஷா
இடைவெளி விடாமல் முத்தம் கொடுத்தேன்
இப்போதெல்லாம் அந்த கேள்வியை அவள் கேட்பதேயில்லை

வானவில்லில் எத்தனை நிறமிருக்கிறது தெரியுமா
சிரிப்பினிடையே கேட்கிறாள் ஸ்ரேயா பாப்பா
உன் நிறத்தில் எத்துனை வானவில்கள் இருக்கிறது
தெரியுமா எனதிருப்பிக் கேட்டேன்
கால்களில் மறுபடியும் கோலம்போட ஆரம்பித்து விட்டாள்

summaaaaaaaa:)

Friday, June 25, 2010

லொள்ளு ஹே லொள்ளு

1.பாடல் :காதல் வந்தால் சொல்லி அனுப்பு

நாம்:Bank balance இருந்தால் வருகிறேன்

2.பாடல்: கண்ணாலனே எனது கண்ணை நேற்றோடு காண வில்லை

நாம்: B3 ஸ்டேசன்ல போய் கம்பிளையண்ட் கொடு

3.பாடல்: நானாக நான் இல்லை தாயே

நாம்: கீழ்பாக்கம் பக்கம் தான் நாயே

4.பாடல்: என்னை காண வில்லையே நேற்றோடு

நாம்: 2 வது கேள்விக்கு நாங்க சொன்ன அதே பதில் தான் உனக்கும்

5.பாடல்: பீமா பீமா பீமாக்கிட்ட கதையை கேட்டேன்

நாம்: முதல்ல நல்ல டைரக்டர்ட்ட கதைய கேளுடா லூசு

6.பாடல் : நீ கோபப்பட்டால் நானும் கோபப்படுவேன்..
நாம் : அதுல கூட ரீ-மேக் தானா, சுயமா எதையும் செய்யமாட்ட…

7.பாடல் : நான் காற்று வாங்கப்போனேன், ஒரு கவிதை வாங்கி வந்தேன்..
நாம் : சொன்னதை விட்டுட்டு கண்டதையெல்லாம் வாங்கு..

8.பாடல் : தோழியா என் காதலியா யாரடி நீ சொல்லு…
நாம் : நல்லா பாருடா, அவ உங்க ஏரியா பிட்சைக்காரிடா..

பின்குறிப்பு: உங்க கற்பனை குதிரைய அவுத்து வுடுங்க…பார்த்து கடிவாளத்த டைட்டா புடிச்சுக்கோங்க ..கீழ விழுந்துற போறீங்க..கட்சில எல்லாத்தையும் தொகுத்துப்போட்டுக்கலாம்