ஏற்கனவே பல பேரு எழுதி கிழிச்சு துவைச்சு காயப்போட்டாலும் நம்ம கருத்தை நாம சொல்லலனா கைகால் எல்லாம் நடுங்க ஆரம்பிக்குது அதனால..
சமீபத்தில் எதிர்பார்த்த 500 டேஸ் ஆப் சம்மர் ச்சி ச்சி சாரி விண்ணைத்தாண்டி வருவாயா க்கு அப்புறம் மன்மத அம்புக்கு முன்னாடி எதிர்பார்த்த படம்
தாம்பரம் வித்யா தியேட்டர் ஒரே ஒரு விக்ரம் கட் அவுட்டோட வரவேற்க்கும் போதே மைல்டா ஒரு டபுட்
வீரா பாடலை பெயர் போடும் போது போட்டு வயித்தெரிச்சலை கட்டிக்கொண்டார் மணி
ப்ரித்விக்கு இதே போல இதுக்கு முன்னாடி ஏதோ ஒரு படத்திலும் உம்ம்னா மூஞ்சி கேரக்டர் பார்த்த மாதிரி நியாபகம் ஐஷு பாப்பா அநியாய அழகு..மனிஷா கொய்ராலாவை தமிழ் டைரக்டர்கள் கலற்றி விட்டது குட் நியூஸ்..
ஆனா இந்த மாதிரி பெரிய பட்ஜட் படத்துக்கு ஐசுவையே போடுவது என்ன வளம் இல்லை இந்த தமிழ்நாட்டில் உணர்ச்சிய தூண்டுகிறது .. இப்போ புதுசா அனுஷ்கா ன்னு ஒண்ணு வந்துருக்கு அதை யாரும் சரியா பயன்படுத்தலன்னு சினிமா வட்டாரத்துல ஒரு பேச்சிருக்காம்
அதை சீக்கிரமே பயன்படுத்தனும்னு உலகத் தமிழ் பட இயக்குநர்களுக்கு இணையான தமிழ் பட இயக்குநர்களிடம் யாராவது கோரிக்கை வைத்தால் தேவலை ..நான் சங்கரின் வெப்சைட்டில் வைத்தேன் அவர் அதை டெலிட் பண்ணிபுட்டாரு பாருங்க என்னமோ சொல்ல வந்து என்னமோ சொல்றேன் நான் கதைய பத்தியோ ராமாயணத்த பத்தியோ பேசப்போறதில்ல ஆனா பிரியாமணிய பத்தி சொல்லியாகனும்
20 பேரு இரவும் பகலும் ரேப் பண்ற மாதிரி ஒரு சீன் நம்ம படத்துல இருக்குன்னு யாரவது டைரக்டர் அசிஸ்டெண்கிட்ட சொன்ன போதும் உடனே அம்மணிக்கு போன் பறக்கும் போல வலிக்குதுடா(ப்ரிய மணி ஸ்டைலில் படிக்கவும்)
அந்த தொங்குபால பைட்டு நச்சு ..ஐசு எதுவோ பேச வீரய்யா என்னமோ டயலாக் பேசுறாரு உருகுறாரு.சுகாசினி சுஜாதாவா பத்தி பேசினா மட்டும் போதாது!!!
சுஜாதாவின்/அழகம்பெருமாலின்/மணியின் டயலாக்ஸ் பக்கம் வரலை சுகாசினியின் வசனம்ஸ்..முன்னாடியெல்லாம் ஹீரோயினுக்கு மட்டும் தான் வாய்ஸ் கொடுத்துக்கொண்டிருந்தார் இந்த படத்தில் இப்படி ஒரு புரோமோஷன்
படத்தில் நான் சிரித்த ஒரே இடம் பிரபுவின் ‘ஜோக்கடிச்சா சிரிக்குறது கிடையாது துப்பாக்கிய காட்டினா பயப்படறுது கிடையாது’ இந்த படத்தை சுகாசினி அம்மையார் ஜெயா டிவியில் நியாயத்தராசில் வைக்குமா? விக்ரம் நல்ல ஜொலிப்பு உடம்பிலும் நடிப்பிலும் அதுக்காக இப்படி 2 வருஷத்துக்கு ஒரு படம் நடிச்சு கமலோ ரஜினியோ ஆக முடியாது அதுக்கு இன்னும் மேல மேல போகனும்
எங்க ஊரு பக்கத்து ஊரு பேரைச்சொல்லிப்புட்டு எங்கோயோ சூட் பண்ணியிருக்காப்புல இந்த சிங்கம் ஹரி தான் நெல்லைன்னு சொல்லிப்புட்டு சாலிகிராமத்துல செட்டு போட்டு படம் எடுப்பாப்புல ம்ம் கார்த்திக்கை பார்த்து யாருக்கும் சிரிப்பு வரலை , சுமோ வீரன் பிரபு ஓரளவு உடம்பு காட்டியிருக்காரு
வயசான ஸ்காட்ச் மாதிரி ஐஷு மின்னுவது அபிஷேக் பச்சனை பார்த்து பரிதாபப்படவைக்கிறது(?????)
இந்தியிலும் பார்த்துப்புட வேண்டும் அங்கேயாது கதை பொருந்தியிருக்கான்னு பார்க்கனும்.மறக்காம
ஒரு முறை பாருங்க ஒளிப்பதிவுக்காக ஐஷுக்காக விக்ரமுக்காக கடைசியா போன போவுதுன்னு ரஞ்சிதாவுக்காக
மணியின் அடுத்த படத்துக்காக வழக்கம் போல வெயிட்டிங்!!!
Thursday, June 24, 2010
Subscribe to:
Post Comments (Atom)


0 கருத்துக்கள்:
Post a Comment